முயற்சிகளை
முடிக்கும் முன்
மூகாரி பாடிடா,
முயல் வென்ற
உயிரியின்
நம்பிக்கையும்!
உதவிகளை
கேட்குமுன்
கம்பி நீட்டிடா
இராமர் கோடிட்ட
உயிரியின்
நட்புகளும்!
தின்னக் கொடுப்பது
எச்சிலென்றாலும்,
உயிர்துறக்குமுன்
விசுவாசத்தை மறந்திடா,
உயிரியின்
செய்நன்றிகளும்!
கையளவென்றாலும்
சாப்பிடுமுன்
கரைந்து கூடிட மறந்திடா,
குணம் கொண்ட
ஊயிரியின்
ஒற்றுமைகளும்!
தூரம் எதுவாகிலும்
வெல்லுமுன்
துவண்டு வீழ்ந்திடா,
உயிரையும் தாரைவார்க்கும்
உயிரின்
தன்னம்பிக்கையும்!
நீவீர்பெற்று
ஒளவையின் “வரப்புயர”
என்றும் வாழ
இன்று வாழ்த்தும்
***
இளமாறன்
—